அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…

0 379
Stalin trichy visit

சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமயபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விவரம் உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.