ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
லால்குடி வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான திருமணமேடு கிராமத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் பேசுகையில் ட்ரோன் தொழில்நுட்பம் அறிமுகம் மற்றும் செயல்படும் விதங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்.
வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் பிரசாந்த் குமார் என் இயந்திர மானிய திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். பயிற்சியில் புறதாக்குடி சண்முகா பார்ம் சர்வீஸ் சண்முகநாதன் ட்ரோன் செயல் விளக்கம் நெல் வயலில் பயிர் பாதுகாப்பு மருந்துகள்தெளித்து விவசாயிகளுக்கு செய முறை காண்பிக்கப்பட்டது.
பயிற்சியில் திருமணமேடு கிராமத்தைச் சேர்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பானி பைப் பற்றி விளக்கி கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜா மா கொய்யா நெல்லி பலா மரக்கன்றுகள் மானிய விலையில் வழங்கினார் பயிற்சிக்கான ஏற்பாட்டினை திரு ராஜசேகரன் வேளாண்மை உதவி அலுவலர்,கார்த்திக் அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.