குடியரசு தினவிழா குழு விளையாட்டு போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம், ட்டியம் வட்டம், தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்படட் மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தினவிழா குழு விளையாட்டுப் போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று (17.2.2223) தொடங்கி வைத்து பார்வையிட்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.