நீர்வளம், நிலவளம் குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், ஆலத்துடையான்பட்டியில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீர்வளம் மற்றும் நிலவளம் துறை திட்டங்கள் குறித்து கூட்டம் நடத்தப்பட்டது இதில் மீன்வளத்துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை. நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரிகளும் கொண்டு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பொது மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. நிறைவாக கூட்டத்தை ஏற்பாடு செய்த எட்வின் ராஜ் நன்றி கூறினார்.