உணவு திருவிழா நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

0 258
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாரத்தில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் S. அல்லி இங்கர்சால், நிறுவனர் மற்றும் தாளாளர், நாளந்தா கல்வி நிறுவனம் முன்னிலையில் முனைவர். C. சேகர், முதல்வர் தலைமையில் மற்றும் முனைவர். B. குணா, இணை பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர்உதவியுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்தினர். இவ்விழாவில் வேளாண் மாணவிகள் உலக பருப்பு தினம், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை நோக்கமாகக் கொண்ட நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக பருப்புகளின் ஊட்டச்சத்து நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தினர். மேலும், உணவு திருவிழாவில் இருபது வகையான உணவுகளை பயறு வகைகளைப் பயன்படுத்தி அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். க. கீர்த்தனா, நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவி வரவேற்புரை வழங்கினார். ச. கீர்த்திகா, நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவி நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.