சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்து…

0 437
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமின்றி டிரைவர் உயிர்த்தப்பினார்.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்ப்பாராமாக இடது புறம் உள்ள அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர்த் தப்பினார்.இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.