ஏரி கரை சீரமைக்கும் பணி….

0 350
Stalin trichy visit

வரகுப்பையில் ரூ. 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் உபரி நீர் ஓடை தூர்வாரி
சிறுவயலூர் ஏரி கரை சீரமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பையில் ரூ 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் உபரி நீர் ஓடை தூர்வாரும் பணி மற்றும் சிறுவயலூர் ஏரி கரையைபலப்படுத்தி சீரமைக்கும் பணிகளை லால்குடி எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

த புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை, சிறுவயலூர் ஆகிய கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வரகுப்பை உபநீர் ஒடை தூர் வார வேண்டும் , சிறுவயலூர் ஏரியைதூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிகளை செய்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றி நிதி ஒதுக்கி பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார் .

அதன் அடிப்படையில் ரூபாய் 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் வர குப்பை ஏரியிலிருந்து – சிறுவயலூர் ஏரி வரை வரகுப்பை உபரி ஓடையை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளையும் சிறுவயலூர் ஏரியில் ஏரி கரையை அகலப்படுத்தி கரையை பலப்படுத்தி கலிங்கி சீரமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அரியார் வடிகால் கோட்டம் திருச்சி செயற்பொறியாளர் நித்தியானந்தம் ,ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் , உதவி செயற்பொறியாளர்கள. ஜோதி, முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர் சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார்.

துணைதலைவர் அண்ணாதுரை, வார்டு உறுப்பினர்கள், விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டார்.

உபரி நீர் ஓடைதூர் வாரும் பணிகளால் வடிகால் நீர் சிறு வயலூர் ஏரிக்கு சென்றடையும். இதனால் ஏரியில் நீர் தேங்கும் போது ஆழ்குழாய் மூலம் இந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கும். வரகுப்பை பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விளை நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், போன்ற தானியங்களை வீட்டிற்கு கொண்டு ஓடை பெரிதும் உதவியாக இருக்கும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.