லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 358
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

லால்குடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மருத்துவமனை வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் இடம்,படுக்கை வசதிகள்,நோயாளிக்கு உணவு தயார் செய்யப்படும் இடம், சமையலறை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டிருந்தார். மருத்துவமனை சுற்றிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் முன்னதாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். மண் முட்டுகளை விரைவில் அகற்றி பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் சிறுதையூர் நான்கு ரோட்டில் இருந்த காந்தி சிலையை சாலை விரிவாக்க பணியின் போது அகற்றி மருத்துவமனையில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பார்வையிட்டு மருத்துவமனை வளாகத்தில் தற்போது அமைத்திட உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் மருத்துவ அதிகாரி, மருத்துவர்கள் செவிலியர்கள், நகராட்சி ஆணையர் நகராட்சி தலைவர் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.