ஓடும் பேருந்தில் எல்.ஐ.சி முகவரிடம் நகை பணம் திருட்டு

0 320
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சந்தப்பேட்டையில் ஓடும் பேருந்தில் எல்.ஐ.சி முகவரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகை,பணத்தை திருடிச் சென்றனர்.

லால்குடி அருகே செம்பரை வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி 40 வயதான சசிகலா. இவர் எல்ஐசி முகவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் லால்குடியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி சந்தப்பேட்டையில் இறங்கி உள்ளார். அப்போது அவர் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பார்த்த போது அதிலிருந்த ஒன்னறை பவுன் நகை மற்றும் ரூ. 5500 பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகை பணத்தை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.