பயணிகள் வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

0 281
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்ததில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நிச்சயதார்த்த விழாவிற்காக பயனிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடியை பகுதியைச் சேர்ந்த 32 வயதான கார்த்திக் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் கதவு திறந்ததால் டிரைவர் கார்த்திக் தவறி கீழே விழுந்தார்.அவர் மீது வேன் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த டிரைவர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.