துவாக்குடி ஸ்ரீ வழியடி கருப்பணசாமி கோயில் மகா கும்பாபிஷேகம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் வழிபாட்டு தெய்வமாகவும் மேலும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில் வழியடி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியார் 1ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையை தொடங்கிவைத்தார் இரண்டாம் தேதி ஆன நேற்று இரண்டு மற்றும் மூன்று கால பூஜை நடந்தது இன்று (3.3.2023) நான்காம் கால பூஜை தொடங்கி நடந்தது பின்னர் புனித நீர் குடங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கோயில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
இந்த விழாவில்
துவாக்குடி நகராட்சி தலைவர் இ.காயாம்பு,ஆனையர் பட்டுசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகளை கோயில் செயல் அலுவலர் வித்தியா
சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார்,மற்றும்
கோவில் பூசாரி ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.