இலவச கண் பரிசோதனை முகாம்

0 423
Stalin trichy visit

 

திருச்சி இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு திப்பா ஆர் கண்ணன் நினைவு அறக்கட்டளை, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மேக்சி விஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து திருச்சி சௌராஷ்டிரா சபா மாதர் சங்கத்தில் மாபெரும் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமினை நடத்தியது.

இணைந்த கரங்கள் நிறுவனர் ராதிகா தலைமை வகித்தார். மாநில தலைவர் நாகூர் மீரான் முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் எல்ஐசி சங்கர் முகாமினை துவக்கி வைத்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமில் நவீன யுகத்தில் அதிக நேரம் அலைபேசி, கணினி போன்ற டிஜிட்டல் ஸ்கிரீனிங்கில் செலவிடும் நிலையில், கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த கூடும். அதனை தவிற்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த நிலையில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் எரிச்சல், கண் சதை வளர்ச்சி ,கண் பிறை , வறட்டு கண் போன்றவற்றை அறிய ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தார் கண்பரிசோதனை செய்து கொண்டனர்.

முன்னதாக இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய திருச்சி மாவட்ட தலைவர் சிவராமகிருஷ்ணன் வரவேற்க, செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். துணை தலைவர் வடிவேல் துணைச் செயலாளர் கதிரவன், பொருளாளர் ராகவன், ஒருங்கிணைப்பாளர் மதன்ராஜ் உட்பட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.