எம்.ஆர்.பாளையம் ஒருங்கிணைந்த பண்ணையில் மகளிர் தினம் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சனமங்கலம் ஊராட்சியில் உள்ள எம் ஆர் பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
வருகின்ற 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சனமங்கலம் ஊராட்சி எம் ஆர் பாளையம் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தில்
ஊராட்சி மன்ற தலைவர்ஹேமலதா தலைமையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளை வாய்ஸ் அறக்கட்டளை விவசாய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
வாய்ஸ் அறக்கட்டளை் இயற்கை வேளாண் இணையம் கவிதா வரவேற்பு உரையாற்றினார். எம் ஆர் பாளையம் வன விரிவாக்க கோட்டம் வனவர் விடுதலை செல்வி இயற்கை போற்றும் பெண்கள் குறித்து உரையாற்றினார். வாய்ஸ் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் விக்டோரியா பரிசுகள் வழங்கி நன்றி உரையாற்றினார்.திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள்,
மற்றும் சுற்று வட்டார கிராமத்தில்உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.