அரசு வழங்கிய வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டல் : வட்டாட்சியரிடம் புகார்

0 350
Stalin trichy visit

 

திருச்சி மார்ச் -11  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பச்சமலை வாழ் மக்கள் அரசு வழங்கிய வீடுகளை காலி செய்ய மிரட்டல் விடுக்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க துறையூர் தொகுதி பொறுப்பாளர், சமூக ஆர்வலர் மாஸ் மகேந்திரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வட்டாட்சியரிடம் (மார்ச் -10) மனு வட்டாட்சியர் புஷ்ப ராணியிடம் மனு அளித்தனர்.
துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சமலையில் தென்புறநாடு ஊராட்சி கம்பூர் கிராமத்தில் 44குடும்பங்கள் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். அவர்கள் வசித்து வந்த இடத்திற்கு 1974 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியரால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்.சிலருக்கு அரசு தொகுப்பு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.அந்த வீடுகளுக்கு வீட்டுவரி ரசீது செலுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையும் இருக்கிறது.இப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் அண்ணாதுரை என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டது ,வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டல் விடுக்கிறார்.அப்பகுதியில் கான்கீரிட் சாலை அமைப்பதையும் தடுத்து வருகிறார்.எனவே எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தை காலி செய்யும் மிரட்டல் விடுக்கும் அண்ணாதுரை என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியரை கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.