சூடம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் வழக்கு பதிவு.
மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் மலையப்பர் சாலை பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மனைவி 64 வயதான சரோஜா இவர் கடந்த 5 ந்தேதி இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு சாமி கும்பிடும்போது எதிர்பாராத விதமாக எரிந்து கொண்டிருந்த சூடம் அவரது சேலையில் பட்டு தீப்பிடித்து எரிந்தது.உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த சரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சிஅரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.