சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்பு நிதி ரூ.556 கோடியாக உயர்வு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

0 947
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வைப்பு நிதியை பொறுத்த அளவில் 2018-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி ரூ.13 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை ரூ.9 கோடி 80 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலில் 1-7-2021 அன்று ரூ.458 கோடி நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 28-2-2023 அன்று வரை ரூ.556.39 கோடி வைப்பு நிதியாக உள்ளது.

அதாவது, தி.மு.க. ஆட்சியில் ரூ.98.39 கோடி வைப்பு நிதியில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியில் இருந்து பெருந்திட்ட வரைவுக்கு நிதி எதுவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் சேகர் அளித்த பேட்டியில்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.