தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அருகே மாந்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் மாந்துறை நகர்ரோடு பகுதியைச் சேர்ந்த 51 வயதான முகமது ஜக்கரியா என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 8 லாட்டரி சீட்டு ரூ. 400 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.