சோளக்காட்டில் தீ விபத்து

0 301
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளப்பாடி ஒன்றியத்தில் உள்ள கீழரசூர் பகுதியில் 5 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட சோளக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. போராடி தீயை அணைத்த லால்குடி, புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள்.

கீழரசூர் பகுதியில் மானாவரி பயிர்களான சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சோளக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த லால்குடி, புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில் ஐந்துக்கு மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளப் பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகியது. சாகுபடி செய்யும் நேரத்தில் சோளக்காட்டில் தீப்பற்றி எரிந்ததால் விவசாயிகள் மன வேதனை அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.