அரசுப்பள்ளிக்கு வருகை தந்த சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்

0 302
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நமது நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள தமிழகத்திற்கு வருகை தந்த சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக மாணவர்கள்.

சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரசு பள்ளி மாணவர்களின் பண்பாடு கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வந்த சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நமது பள்ளியில் நடைபெறும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்க நெறிமுறைகள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என நேரில் பார்வையிட்டனர்.

முதலில் குத்து விளக்கேற்றி பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் குடிலில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி தொடங்க நடைபெறும் காலை வழிப்பாட்டுடன் தமிழ் தாய் வாழ்த்து கொடியேற்றுதல் தேசிய கீதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து நமது கலாச்சார கலை நிகழ்ச்சிகளான சிலம்பம் கரகம், நாட்டுப்புறப்பாட்டு,தற்காப்புகலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சென்னையைச் சேர்ந்த இரட்டைப் பிறவிகளான
சர்வதேச இளம் எக்ஸ்னோரா மாணவர்களின் தூதுவர் மாஸ்டர் ஹர்பித், செல்வி ஹர்பிதா மாணவ மாணவிகளுக்கு உத்வேகம் தரும் வகையில் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து நமது அரசு பள்ளி மாணவர்கள் சுடவீன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பரிமாற்றம் செய்து கொண்டு கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் சிறுகாம்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் கலந்து கொண்டனர்.சர்வதேச இளம் குழந்தைகள் சமூக நல அமைப்பின் நிறுவனர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். ஸ்வீடன் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நந்தலாலா,சந்தானம், சங்கரி ஆகியோர் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக ஹியூமரஸ் பானு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் தேன்மொழி தொகுத்து வழங்கினார் இந்நிகழ்வில் சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.