பைக்கை தீ வைத்து எரித்த மர்மநபர்கள்

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள நேருநகரில் வீட்டில் இருந்த மோட்டார் பைக்குகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள். மோட்டார் பைக்குகள் எரிந்து நாசம்.

மண்ணச்சநல்லூரில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு அவரது மனைவி மகாலட்சுமி, மகன்கள் நிரஞ்சன், சரவன் மற்றும் மணிகண்டனின் தாய் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு, அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனர்.

இரவு 12 மணியளவில் வீட்டின் முன்பு சத்தம் கேட்டு ஹாலில் படுத்திருந்த மணிகண்டனின் தாய் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்டோர் எழுந்து வந்து வாகனங்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது குறித்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.