புனித.பாத்திமா பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா..!

0 734
Stalin trichy visit

ஏப்ரல்.02, திருச்சி, புத்தூர், புனித பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா மற்றும் நூற்றாண்டு விழா பற்றிய சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்சகோதரி. சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. அருள் மேரி அவர்கள் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. ஸ்டெல்லா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.நூற்றாண்டு கடந்து சிறப்பிக்கும் பாத்திமா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் நினைவலைகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர் மன்ற அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும், பள்ளி கோரும் கோரிக்கைகளை நிறைவேற்ற
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் மன்ற அமைப்பு முறையாக துவங்கப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் மாணவர் மன்ற அமைப்பின் செயலராக திரு. ஜோ அற்புத சகாயராஜ் , இணைச் செயலராக திருமதி. சங்கீதா, பொருளாளராக திரு. ஷேக் அப்துல்லா, துணைப் பொருளராக திரு. செபாஸ்டின் அவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆசிரியைகள் திருமதி. செல்வி அவர்கள் கூட்டத்தை வழிநடத்தினார். ஆசிரியை. நிர்மலா அவர்கள் கலந்துரையாடல் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆசிரியை. விக்டோரியா அவர்கள் ஆசிரியைகள் சார்பாக பழைய நினைவுகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஆசிரியை. மேகலா அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்வினை ஆசிரியைகள். திருமதி. ரோஸி மற்றும் திருமதி. எமல்டா அவர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் பள்ளி ஆசிரியர் பெருமக்கள், முன்னாள் மாணவர், மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.