லால்குடி நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் உத்தரப்பொடி உடன்பிறப்பாய் ஒன்றிணைவோம் கழக உறுப்பினர் சேர்க்க முகாம் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது் இந்த முகாமில் திமுக மேலிட பார்வையாளர் புதுக்கோட்டை சந்திரசேகர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கட்சி பணியாற்றுவது தமிழக அரசின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு படிவங்கள் கொடுத்து சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் புள்ளம்பாடி ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேரூராட்சி தலைவர்கள், இளைஞர் அணியினர் தகவல் தொழில் நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.