சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்
எரகுடி பகுதியில் 19 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆகியோருக்கு இரண்டாம் ஆண்டு திருக்கல்யாணம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் இன்று நடைபெற்றது காலை 10:30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை கீழப்பட்டி எரகுடி வடக்குப்பட்டி கரிகாளி திருமானூர் ஆகிய சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை ஆறுமுக தொண்டர் படையினர் மிக சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தனர்