ஒருங்கிணைந்த சமையல்கூடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா

0 252
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளபரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சமையல்கூடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை
நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.

லால்குடி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள 8 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டும் பணியை லால்குடி நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமையில், நகராட்சி ஆணையர் குமார் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி லால்குடி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள 8 துவக்க பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 757 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு தயார் செய்ய புதிய ஒருங்கிணைந்த சமையல் கூட புதிய கட்டிடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.