புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேபாடாலூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிலுவைப்பாதை நேற்று நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாகக் கடைபிடித்து, பின் இந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக நினைவு கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனா். அதன்படி புனிதவெள்ளி கிறிஸ்தவர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பாடாலூரில் உள்ள பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் சிலுவையை சுமந்து சென்று இயேசுவின் துதிப் பாடல்களை பாடி சிலுவை பாதை நிகழச்சியை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பங்குத்தந்தைகள் அருள் திரு மார்சலின் அந்தோணிராஜ் மற்றும் அருள்திரு டேவிட் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைப்பெற்று திருச் சிலுவைக்கு முத்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தின் கிளை பங்கை சேர்ந்த பி.கே. அகரம், செட்டிகுளம், வாலையூர், சணமங்கலம், பாடலூர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3
ஆம் நாள் அவர் உயிர்தெழுந்தார் என்பதை உணர்த்தும் வகையில் வரும்
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.