சமயபுரத்தில் தீத்தொண்டு வார விழா
திருச்சி, ஏப்.15 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீத்தொண்டு வார விழா நடைபெறும். அதன்படி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தீத்தொண்டு வார விழா தொடங்கியது. நேற்று முதல் வருகின்ற 20 ம் தேதி வரை தீத்தொண்டு வார விழா நடைபெறும். இந்நிலையில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, சிறப்பு நிலைய போக்குவரத்து ரவிக்குமார்,மெக்கானிக் ஓட்டுநர் சுதர்சன், முன்னணி தீயணைப்பாளர் சூசை மைக்கேல் வீரர்கள் சதீஷ், விக்னேஷ், திவாகரன், சபாபதி, செல்வகுமார், சதீஷ், முகமது மைதீன், கார்த்திக் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வருகின்ற 20-ம் தேதி வரை தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.