லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்: கலெக்டரிடம் புகார் அளித்த மாற்றுத்திறனாளி

0 507
Stalin trichy visit

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க வந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

திருச்சி முதலியார் சத்திரம் 50-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆர் சி காம்போண்ட் பூந்தோட்டம் பகுதியில் 29 வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் வீடுகளில் உள்ள கழிவறைகளில் நிரம்பி வழிகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் லஞ்சம் கொடுக்க மறுத்த 9 வீடுகளில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரிடம் கோரிக்கை புகார் மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.