கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி செயலரின் குருத்துவ வெள்ளி விழா ஆண்டு
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. S. லூயிஸ் பிரிட்டோ அடிகளார் அவர்களின் 25 ஆம் ஆண்டு குருத்துவ ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வையொட்டி கல்லூரி வளாகத்தில் இசை, நடனம் நிகழ்த்தி மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மாணவர்கள்
அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடினர்.
தொடர்ந்து செயலர் தந்தை அவர்கள் தனது 25ஆம் வெள்ளி விழா அருள்பணியாண்டை முன்னிட்டு 25 பழ மரக்கன்றுகளை வழங்கினார். கொய்யா, நாவல், மாதுளை உள்ளிட்ட கன்றுகளை ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் அவருடைய கரங்களில் பெற்றனர்.
மொழித்துறை சார்பில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமார், சமஸ்கிருதத் துறை முனைவர் இல.கோவிந்தன், ஆங்கிலத்துறை முனைவர் பியூலா எஸ்தர்,
ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.