துபாய் தீ விபத்தில் இறந்த தொழிலாளர்கள் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

0 364
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18 துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம்காசீம் மற்றும் குடு (எ) மகமது ரபிக் ஆகியோர் தங்கியிருந்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். இருவரது உடல்களும் துபாய் இருந்து திருச்சி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டது. அவர்களின் உடல்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இருவரின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.