ஓ.பி.எஸ். அணியினர் 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அணியில் இணைந்தனர்

0 404
Stalin trichy visit

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில், ஓ.பி.எஸ் அணியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக இணை செயலாளர் வழக்கறிஞர் கு.கவிதா தலைமையில் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெருமாள், அவைத் தலைவர் செல்வராஜ், இணைச்செயலாளர் கலாமணி, துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், நந்தினி, மாவட்ட பிரதிநிதிகள் சரிதா, விஜயகுமார், ஊராட்சி கழக செயலாளர்கள் வைரிசெட்டிபாளையம் சந்திரசேகர், வெங்கடாசலபுரம் நந்தகுமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அணியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உப்பிலிபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அழகாபுரி செல்வராஜ், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்மோகன், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் பேரூராட்சி கழக செயலாளர் ராஜாங்கம், முசிறி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.