ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழாவிற்கு அடிக்கல் நாட்டு விழா

0 401
Stalin trichy visit

திருச்சி பொன்மலையில் வருகின்ற 24 ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா மானாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அதிகாலை நடைபெற்றது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்,அதிமுக 51 ஆம் ஆண்டு விழா – அம்மாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஒ.பி.எஸ் அறிவித்து இருந்தார் மேலும் – திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 10ம் தேதி ஓபிஎஸ் அணியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது – இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான கட்சி உறுப்பினர்களுக்கு திரட்டி மாபெரும் மாநாடு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

திருச்சியில் ஒ.பி.எஸ் அணியினர் சார்பில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாடு – பொன்மலை ஜி – கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான முகூர்த்த கால் நடும்விழா இன்று அதிகாலை நடைபெற்றது.

இன்நிலையில் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் வருகின்ற 24-ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதில் ஒ.பி.எஸ் ஆதரவாளரான
முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன்,முசிறி ரத்தினவேல், சாமிக்கண்ணு,ராஜ் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.