சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

0 5,993
Stalin trichy visit

திருச்சி, ஏப்.20- திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.