சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது அவதூறு : அண்ணாமலை மீது காவல்கண்காணிப்பாளரிடம் புகார்
சமூக வலைதளத்தில் ( Twitter ) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பத்தை பற்றி மிகவும் தரம் தாழ்த்தி செய்தி வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மணப்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் புகார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்கிற வழக்கறிஞர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்த புகார் மனுவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பாரம்பரியமான குடும்பத்தை பற்றி மிகவும் அவதூறாக ட்விட்டரில் செய்திகளை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை இந்த செயல்பாட்டால் தான் மிகவும் வருத்தம் அடைந்து மனவேதனை அடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகும் மனுவில் கூறியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்து வைத்ததாகவும் வீடியோ ஒன்றினை வெளியிட்டார் அண்ணாமலை – எனவே பாரம்பரியமாக பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி பொதுமக்களிடம் பெரும் நன்மதிப்பு நற்பெயர் எடுத்துள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த அன்பில் தர்மலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் குடும்பத்தை கெடுக்கும் எண்ணத்தில் அவர்களின் புகழுக்கு ஊரு விளைவிக்கும் பொய் செய்திகளை வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.