ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

0 266
Stalin trichy visit

மணப்பாறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று தான் நோன்பு. ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பிருந்து ரமலான் தினத்தில் சிறப்பு தொழுகை நடத்தி நிறைவு செய்வார்கள். இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பாத்திமா மலையில் உள்ள ஈத்கா திடலில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. புத்தாடை அணிந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுதனர். பின்னர் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக் கொள்ளும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில் சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது. இதே போல் வையம்பட்டி, புத்தானத்தம், இளங்காகுறிச்சி, துவரங்குறிச்சி, வளநாடு, மகாளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.