குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருச்சி மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலனி பகுதியில் 3 தலைமுறைகளாக வீடுகள் கட்டி குடியிருந்த மக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக காலி செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததின் பெயரில் இடத்தை காலி செய்து கொடுத்த கல்மந்தை காலனி மக்களுக்கு முழுமையாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்திட வேண்டும் மற்ற என வலியுறுத்தி பாலக்கரை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கல்மந்தை காலனி பகுதி மக்களும் இணைந்து கிளை செயலாளர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது இப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரங்கராஜன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் போராட்டத்தை ஒட்டி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கொண்டு திருச்சி கிழக்கு தாசில்தார் அவர்களின் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது