டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகள் திறப்பு

0 436
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூரில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பு அணைகளை இன்று திறந்து வைத்தனர்.

டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் மேலரசூர் கிராமத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் இரண்டு தடுப்பு அணைகள் கட்டப்பட்டது. இந்நிலையில் டால்மியா சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி தடுப்பணைகளின் கல்வெட்டினை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதில் மேலரசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, துணைத் தலைவர் முருகபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். மேலும் ஆலையின் பொது மேலாளர்கள்  சுப்பையா, ரமேஷ்பாபு, விவேகானந்தன், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் டால்மியா பாரத் பவுண்டேசன் மேலாளர் தழ நாகராஜன் நன்றி உரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  சுரேஷ் மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.