முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

0 305
Stalin trichy visit

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது – பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் திருச்சியில் பேட்டி..

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”என்ற புகைப்பட கண்காட்சியை பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இன்று பார்வையிட்டார்…

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

நீண்ட நெடுநாள் பிறகு தமிழ்நாட்டில் முதலமைச்சரை இப்படி பார்ப்பது பெருமையாக இருக்கிறது, முதல் தடவையாக முதல்வருடைய புகைப்படங்களை பார்த்து பெருமைப்படுகிற தருணம் இது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கிறது அதற்கு தலைவராய் ஸ்டாலின் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது அதனால் தான் நம் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்தார்…

இந்நிகழ்வில் மாநகரச் செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஜோ மல்லூரி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்…

Leave A Reply

Your email address will not be published.