முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருச்சி, அக்.29 முன்னாள் அமைச்சர் கே என் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது அந்த துறையில் பணி நியமனம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அதற்கு எதிராக கே என் நேரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. கடந்த மாதம் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே,என்,நேரு வீட்டில் சோதனை செய்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது. . இதனை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.