த.வெ.க ஆட்சியில் குறைகள் இருந்தாலும் உடனடி நடவடிக்கை : திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி, அக். 29 த.வெ.க ஆட்சியில் குறைகள் இருந்தாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பொது மக்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் “சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்” (Mass Contact Programme) நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் மூலம் பொது மக்கள் தங்களின் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகத் தெரிவித்து உடனடித் தீர்வுகளைப் பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இத்திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்சி, பாலக்கரையில் உள்ள மாநகராட்சி மண்டலம் 2ல் அலுவலகத்தில் அந்த முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இதில் அனைத்துத் துறை சார்ந்த முக்கிய அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரமேஷ் :
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன்.
இதே போல் திருச்சியில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது, பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண வழிவகை செய்து வருகிறோம்.
பேருந்துகள் முறையாக பேருந்து நிலையத்தில் நிற்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர், அதே போல் புதிய பேருந்து சேவை வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள், கால்வாய்கள் தூர்வார வில்லை இப்படி பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
எங்கெல்லாம் தண்ணீர் நிற்கின்றதோ அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதே போல் ரேஷன் கார்டு கேட்கும் பொது மக்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம்.
இன்சூரன்ஸ்,சான்றிதல்கள் போன்ற மக்கள் கேட்பதை கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
பட்டா கேட்டு விண்ணப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது அதனை சாத்தியப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம் இன்னொன்று அதிகப்படியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்,
அதுவே பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் இதற்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்தி இருந்தோம் – இதில் 3000 பேர் கலந்து கொண்டனர், 1000 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.
ஒவ்வொரு தொகுதிகளும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.
காந்தி மார்கெட் இடம் மாற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்து வருகிறேன், பின்னர் இது குறித்து தெரிவிக்கிறேன். அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது இனிமேல் தான் அது குறித்து நான் தயாராக வேண்டும், நிச்சயமாக முக்கியமான தேவைகள் குறித்து பேசுவோம்.
விடியல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த திமுக ஆட்சியில் விடியல் இல்லாததால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்,
ஆனால் த.வெ.க ஆட்சியில் விடியல் இல்லை என அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இங்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஆட்சியில் குறைகள் நடந்தால் கூட அதனை உடனடியாக சரி செய்து வருகிறோம், மக்கள் குறைகளை தீர்ப்பதற்காக எல்லா நடவடிக்கையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
யாத்ரி நிவாஸ் மின்வாரியத்திற்கு மூன்று கோடி வரை பணம் செலுத்தாமல் இருப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கலந்து பேசி உள்ளேன் அடுத்த வாரம் தொடர்பாக கூட்டம் உள்ளன ஏற்பாடு செய்திருக்கிறேன் நிச்சயமாக இது குறித்த விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பேன். இரண்டு தரப்பையும் அமர வைத்து பேசி என்ன பிரச்சனை? இதற்கு என்ன தீர்வு என்பதனை யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இடிந்த பகுதியை பொறியாளர்களை கொண்டு உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறோம் – அதே போல் ஒட்டுமொத்தமாக ராஜகோபுரம் மட்டுமல்லாமல் எல்லா கோபுரங்களையும் ஆய்வு செய்ய அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன்
தற்காலிக தரைக் கடை வியாபாரிகள் பிரச்சனையை பொருத்தவரை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவர்கள் செயல்படும் அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.