உத்தமர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா 2 ம் நாள் சுவாமி திருவீதி உலா

0 339
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவின் 2 ம் நாளில் புருஷோத்த பெருமாள் சூரியபிறை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும், மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளுடன் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோவில் ஒன்றே ஆகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழா சித்திரைத் தேரோட்ட விழா.இந்த சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் தேர்த்திருவிழாவின் 2 ம் நாளான நேற்று இரவு புருஷோத்த பெருமாள் சூரிய பிறை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வருகின்ற 4 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.