எஸ். ஆர். எம். கல்லூரி வளாகத்தில் திட்ட வரைவு கண்காட்சி தொடக்க விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ். ஆர். எம். கல்வி குழும வளாகத்தில் திட்ட வரைவு கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த திட்ட வரைவு கண்காட்சியில் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் 232 திட்ட வரைவுகள் செய்யப்பட்டு அதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திறம்பட எடுத்துரைத்தனர்.
இந்த திட்ட வரைவு கண்காட்சியை 3500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்கள் சான்றோர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். எஸ்.ஆர்.எம். டி. ஆர். பி பொறியியல் கல்லூரியின் முதல்வர் கணேஷ் பாபு வரவேற்றார். எஸ் ஆர் எம் திருச்சி மற்றும் இராமாபுரம் வளாகங்களின் தலைவர் மருத்துவர் சிவகுமார் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் நிரஞ்சன் விழா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து வளாக முதன்மை இயக்குனர் முனைவர் சேதுராமன் இயக்குனர் மால்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பி.கே. நசைன் மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார். அப்போது அவர் மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்றும் திட்ட வரைவு தொடக்க விழாவில் விதைக்கப்பட்ட விதை நாடு முழுவதும் மரமாக விரிந்து பல முன்னேற்றங்களை அடைய வேண்டும் என கூறினார். மேலும் புதிய தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்படும் அனைத்து கண்டுபிடிப்புகளையும் மனித குலத்தின் உயர்விற்காக உருவாக்குவதை இன்றைய தலைமுறையினர் கருத்தில் கொள்ள கொண்டு செயல்பட வேண்டும் என கூறினார் இறுதியாக எஸ்.ஆர்.எம் ஐ.எஸ். டி.டீன் முனைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றியிரை கூறினார்