புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் : சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
உடையாம்பட்டியில் ரூ.11.65 வட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள உடையாம்பட்டியில் ரூ.11.65 வட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள உடையாம்பட்டியில் 2021 – 2022 ,சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில் ரே. 11.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள செல்லாங்கரையில் தொகுதி மேம்பாட்டு நிதி
2021 – 2022 திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையையும் எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைப்பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.