இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை

0 357
Stalin trichy visit

இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60) கடந்த 30வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று தாயகம் திரும்பிய அவருக்கு சிவகங்கை படை வீரர்கள் பாசறை, ஒருங்கிணைந்த தமிழக பட்டாளம், மணவை அக்னி சிறகுகள், சேயோன் இராணுவ பயிற்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளைகளை சேர்ந்த நிர்வாகிகள், திருச்சியை சேர்ந்த இராணுவ வீரர்கள் இன்று திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். போபாலில் இருந்து இரயில் மூலம் திருச்சிக்கு இன்று காலை அவர் வந்து சேர்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.