திருச்சி உத்தமர் கோவில் சித்திரை தேரோட்டம்
மும்மூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உத்தமர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று புனர்பூச நட்சத்திரம் மிதுன லக்னத்தில் கொடிமரத்தில் கொடியேற்றி சிரப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை 10.00 மணி அளவில் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து எழுத்தனர். மேலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால் 100க்கும் மேற்பட்ட காவல்துரையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.