குமர விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

0 303
Stalin trichy visit

திருச்சி அருகே குமர விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல குமரேசபுரத்தில் உள்ள குமார விநாயகர் கோவில் அந்த பகுதி மக்கள் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.
இந்த நிலையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலயத்தில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை. கலைமகள், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, நவகிரக மூர்த்திகள் ஆகிய தெய்வங்களுக்கு பதினெண் சித்தர் இந்து மறுமலர்ச்சி இயக்கம் ஆகியோரால் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

முன்னதாக மூன்றாம் தேதி மாலை கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. மாலை முதல் காலை பூஜையும்,இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நான்காம் தேதிகாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

இந்த விழாவில் குமரேசபுரத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.