அரிசி கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

0 297
Stalin trichy visit

 

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முகமது அலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஈசாக் (31). இவர் அங்குள்ள அப்துல் கலாம் ஆசாத் தெருவில் அரிசி மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ரமேஷ் கடையில் இருந்த போது 4 வாலிபர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவரை அரிசி மூட்டையில் தள்ளிவிட்டு கையில் இருந்த பணப்பையை பறித்து விட்டு மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முகமது ஈசாக் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அரிசி கடைக்காரரை தாக்கி பணம் பறித்த அரியமங்கலம் காமராஜ் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (29), அரியமங்கலம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (30) ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர் .மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடிவிட்டனர் ரஹ்மான், விஜய் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.