நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள்தான் பிரச்சார பீரங்கிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

0 278
Stalin trichy visit

2024 நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள்தான் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட வேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் பொன்னம்பட்டி பேரூர் திமுக வின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியபோது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் பிரச்சாரக்குழு இருக்கும். ஆனால் பிரச்சார பீரங்கியாக திகழ்வது பெண்கள்தான். அவர்கள் தான் ஒரு வீட்டின் அடுப்பங்கறை வரை சென்று இருக்கின்ற அரசாங்கத்தை பற்றி பேசக்கூடிய உரிமை உண்டு. அதனை மனதில் கொண்டு தொடர்ந்து நீங்கள் சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ தேர்தல் எதுவாக இருந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்ததுபோல் 2024 ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான பெண்களை பார்த்து அமைச்சர் பேசினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், பேரூர் செயலாளர் நாகராஜ், மருங்காபுரி ஒன்றிய செயலாளர்கள் சின்னடைக்கன், செல்வராஜ், ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, பேரூராட்சி தலைவர் சரண்யா, வார்டு செயலாளர் ஜேம்ஸ் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.