பி.ஜே.பி.யை அகற்றி நாட்டை காப்போம் நடைபயணம்
திருச்சி, மே 5 திருச்சி உறையூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிஜேபியை அகற்றி, நாட்டை காப்போம், மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் நடத்தப்படும் நடைபயணத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.