பாடலூரில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்ப்பவனி விழா

0 357
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பாடலூரில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்பவனி விழா நேற்று இரவு வெகு விமரிசையாசாக நடைபெற்றது.

பாடலூரில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்பவனி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சப்பர தேர் பவனியை முன்னிட்டு கடந்த 1 ம் தேதி அன்று அருட்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அருள்தந்தைகள் அன்புராஜ், பெல்பிட் ஆண்டனி, ஜான் கொர்னே லியூஸ் ஆகியோரால் நவநாள் திருப்பலி நடைப்பெற்றது.முக்கிய நிகழ்வான சப்பர தேர் பவனி விழா நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது் முன்னதாக தேவாலயத்தில் அருட்தந்தைகள் மார்சலின் அந்தோணி ராஜ் மற்றும் யேசுதாஸ் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடைபெற்று சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளில் சப்பரபவனி ஊர்வலமாக வந்து தேவாலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இவ்விழாவில் பாடலூர், சணமங்கலம்,பி.கே.அகரம், நெடுங்கூர் சீதேவி மங்கலம், மணியாங்குறிச்சி ஊட்டத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.