பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண விழா இன்று நடைபெற்றது.
அன்பில் கிராமத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று இரவு திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று காலை 5:30 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம், ஜபம் மூலமந்திரம் யாகம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம்,சங்காபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சோமஸ்கந்தர் திருவீதி உலா முடித்து திருக்கோவிலுக்கு சுவாமி வந்தடைந்ததும் மாலை மாற்றுதல்
,பச்சைப்பிடி சுற்றி கண்ணூஞ்சல் நடைபெற்று திருமாங்கல்ய தாரண வைபவம் நடைபெற்றது.
பின்னர் பூர்வாங்க பூஜைகள், மாதேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி புறப்பாடாகி திருவீதி உலா நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.